தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தொழில்முனைவு மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான தேசிய கருத்தரங்கம் நடந்தது.
மாணவிகளிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்த்தல், புதுமை மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான பாதைகள்" என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சியில் வணிக நிர்வாகத்துறை உதவி பேராசிரியர் ஜி.எஸ்.. சுபாஷினி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் டி.ரோஸி தலைமை வகித்து பேசினார்.
திருச்சி என் ஐ டி பேராசிரியை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் மலர்விழி, வணிக நிர்வாகத்துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியை லட்சுமிபாலா ஆகியோர் தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான அறிவுரைகளை விளக்கி பேசினார்.
இந்தக் கருத்தரங்கில் புதுச்சேரி பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் பாரதிதாசன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் காந்திகிராமம் பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் விஜயவாடா பெங்களூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவிகளின் ஆய்வு கட்டுரைகள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன.