மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர் - மாணவிகள் கடந்த மே 1ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ளனர். 




Blue Sattai Maran Tease: வெளியான டான்! தூங்கி வழிகிறதா தியேட்டர்? விமர்சித்த புளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. !


சப் ஜூனியர் பிரிவில் போட்டியிட்ட மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் 5 வெள்ளிப் பதக்கத்தையும் குவித்து மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கோவை, மதுரை, சேலம்,  திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் பங்கேற்ற நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவி தனலட்சுமி 54 முதல் 56 கிலோ எடைப் பிரிவிலும் , வெண்ணிலா 36 முதல் 38 கிலோ எடை பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். 




நேசமணி காமெடிக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா ? - ரிவீல் செய்த மதன் பாபு!


இதனிடையே வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து தேசிய அளவிலான நடைபெறும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வெல்வோம் என மாணவிகள் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி “ - நடிகர் பொன்னம்பலம் எமோஷ்னல் டாக்!


நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்காமல், அவர்களின் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றன. இதில் விதிவிலக்காக ஒரு சில மாணவர்கள் மற்ற சமூகத்தினர் போன்று தங்களையும் கல்வி மூலம் வளர்த்துக் கொள்ள, பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்வி பயில்வது  மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளே உறைந்திருக்கும் மற்ற திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். மேலும் அரசு இவர்கள் கல்வி பயில தடையாக இருக்கும் ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை இவர்கள் பெறுவதற்கு எளிமைப்படுத்தி ஆதியன் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவ இனத்தவர்கள் பயிலும் உண்டு உறைவிடப்பள்ளி தமிழகம் முழுவதும் அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோளாக தெரிவித்துள்ளனர்.