ஸ்டெண்ட் கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பொன்னம்பலம். சிலர் இவரை இன்றளவும் கபாலி என்றுதான் அழைக்கின்றனர். பொன்னம்பலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பொன்னம்பலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் . அவருக்கு நடிகர்கள் பலர் உதவிய நிலையில் , விஜயகாந்த் மட்டும் நலமுடன் இருந்திருந்தால் எனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது என அவரும் உதவும் குணத்தை நேர்காணல் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.


 






 


" விஜய்காந்த் சார் எனக்கு கடவுள் மாதிரி . ஆனால் அவரை நான் நேரில் சென்று பார்க்கவில்லை. காரணம் என்ன தெரியுமா ..நான் ஐந்து வருடங்களாக கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. எதையும் தாங்கும் சக்தி கிடையாது. நான் அவரது வீட்டிற்கு போய் , அவரை பார்த்தால் இறந்துவிடுவேன். உண்மை  அதுதான். அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். அவர் மட்டும் நலமுடன் இருந்திருந்தால், எனது வீட்டிற்கு வந்து என்னை பார்த்து, அனைத்தையும் செய்து கொடுத்திருப்பார். அந்த அளவுக்கு அன்பான, நேர்மையான மனிதன். அவர் மனிதன் என சொல்லக்கூடாது, தெய்வம். எங்க வீட்டில் முதன் முதலில் ஃபிரேம் செய்து மாட்டிய புகைப்படம் அவருடையதுதான். நான் என்னைக்கு ஸ்டெண்ட்டிற்காக வந்தேனோ, அன்றைக்கே தெரிந்துவிட்டது நாம சாக போறோம்னு, அதனால எனக்கு சாவ பற்றியெல்லாம் கவலை இல்லை. சரத்குமார் சார்தான் எனக்கு அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். அதன் பிறகு தனுஷ் எனது மானத்தை காப்பாற்றியவர்“ என தனக்கு உதவியவர்களை நினைவு கூர்ந்தார்.


Also Read | DON Review: ‘டான்’.. ரியல் டானா.. இல்ல டன் டன் டனாக்கானா டானா..? - டான் படம் எப்படி இருக்கு- விமர்சனம் இதோ..!