கூலி வேலையின் போது பார்வை பறிபோன சுமை தூக்கும் தொழிலாளி: பக்கவாதத்தால் படுத்த படுக்கையானவருக்கு மருத்துவ செலவிற்கு உதவ கோரிக்கை.
நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு தேவி என்ற மனைவியும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.கடந்த ஓராண்டுக்கு முன்பு சுமை தூக்கும் பணியின் போது சசிகுமாருக்கு கண் பார்வை பறி போயுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டிருந்த நான்காவது நாளில் மேலும் ஒரு பெரிய இடியாக அவரது ஒரு கை ஒரு மற்றும் ஒரு கால் முற்றிலும் செயலிழந்து உள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சுமார் 12 லட்சத்திற்கும் மேலாக நிலையில் நகைகளை விற்றும் கடன் பெற்றும் செலவு செய்தும், சசிகுமாரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வரை தொடர் சிகிச்சையில் இருந்து வரும் சசிகுமாருக்கு மாதத்திற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவர் செலவுகள் ஏற்படுவதாக அவரது மனைவி தேவி தெரிவித்துள்ளார். சசிகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் வீட்டில் போதிய வருமானம் இன்றி உள்ளதாலும் தனியார் பள்ளிகளில் படித்து வந்த மூன்று குழந்தைகளையும் தற்பொழுது அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
படுத்த படுக்கையாக இருக்கும் தனது கணவனை காப்பாற்ற வேண்டும், மூன்று பிள்ளைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காக நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவம் மற்றும் உணவிற்கும் வழியில்லாமல் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டிருக்கும் தேவி வீட்டு வேலைகளுக்கு சென்ற நிலையில் கணவனை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அதையும் கைவிட்டு வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனையும் தனது கணவனையும் காப்பாற்ற தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசிற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசைப்படகில் உரிய ஆவணங்கள் இன்றி கடலில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் பிடித்து இந்திய கப்பல் படையினர் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லை வாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன் இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று 10ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் கலைவாணன், ராஜி, கவியரசன்,செங்குட்டுவன் உள்ளிட்ட 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். திருமுல்லைவாசல் கிழக்கே 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய இந்திய கப்பல் படையினர் மீனவர்களின் படகையும் ஆவணங்களையும் சோதனை செய்தனர், உரிய ஆவணங்கள் இன்றி கடலுக்கு மீன்பிடிக்க தொழிலுக்கு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து படகுடன் 9 மீனவர்களையும் நாகை துறைமுகம் அழைத்து வந்தனர்,அங்கு மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கலைவாணன் நாகை அக்கரைப்பேட்டை மணிகண்டனிடமிருந்து படகு வாங்கியதும் பெயர் மாற்றம் செய்யப்படதாததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் அடையாள அட்டை மற்றும் படகின் ஆவண நகலை கொடுத்தனர். பின்பு அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய பின்பு அவர்களை விடுவித்தனர். அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் இல்லாமல் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள்
அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.