நாகை அருகே ஆலங்குடி கிராமத்தில் கடுவை ஆற்றிலிருந்து பிரியும் மங்கல மகிழனாற்றில் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால்,  தண்ணீர் வராமல் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


நாகை மாவட்டம் ஆவராணி புதுச்சேரி அடுத்த ஆலங்குடி கிராமத்தில் கடுவை ஆற்றிலிருந்து பிரியும் மங்கல மகிழனாறில் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட்து. 40 நாட்களுக்கு மேலாகியும் பணி நிறைவு பெறாததால் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை வந்தும் இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடைக்கு வந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுப்பணி துறையினர் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


மேலும் படிக்க: பசுவின் மடியில் பசியாறும் ஆட்டுக் குட்டிகள்; கோவையில் ஒரு ஆச்சரிய நிகழ்வு..!




ஆலங்குடி, மகாதானம், ஒரத்தூர், அகரஒரத்தூர், செட்டிச்சேரி, கருவேலங்கடை, பாப்பாகோவில் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அப்பகுதியில் ’கோ 51’ ரக நெல்லை விதைப்பு செய்து தண்ணீர் இல்லாததால் விதை நெல் கல் காய்ந்து வருவதால் முளைப்புத்திறன் இல்லாமல் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். தங்களுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் அனைத்து பகுதிகளுக்கும் விவசாயத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் செல்வது உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.


மேலும் படிக்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண