மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: வரலாறு காணாத பெரும் மழையால் ஒருவார காலமாக மழைநீர் வடியாமல் இப்பகுதிகள் முழுவதும் வெள்ளை காட்சியாக உள்ளது. ஆங்கங்கே கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இத்தகைய சூழலில் பல்வேறு பணி சுமைகளுக்கு இடையே உடனடியாக தமிழக முதல்வர் நேரில் வந்து பார்வையிட்டதற்கு நன்றியினை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணமாக ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது. இதுபோதுமானது அல்ல என்ற கருத்து பொதுவாக பொதுமக்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். ஆகையால் கூடுதலாக வழங்க தமிழக முதல்வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுக்காவிற்கு மட்டும் நிவாரணம் வழங்காமல் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட முழுவதும் நிவாரணம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். இங்கு பயிரிடப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி போய் உள்ளது. இதற்கு இழப்பீடாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் வழங்க வேண்டும். நவம்பர் 15 -ம் தேதியுடன் பயிர் காப்பீட்டு செய்யும் தேதி முடிவடைந்துள்ளது. இங்குள்ள நிலமையை உணர்ந்து ஒன்றிய அரசு பயிர் காப்பீட்டு செய்யும் தேதி நீடித்தது வழங்க வேண்டும், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டும் பேரிடர் நிவாரண நிதியை எந்த அளவுக்கு நிவாரணம் வழங்க முடிமோ அந்தளவுக்கு வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கிடு அவற்றை செப்பனிட்டவும், மேலும் புதிதாக வீடுகளையும் கட்டி தர ஆணைபிறப்பிக்க வேண்டும், கொள்ளிட கரையோர படுகையில் விவசாயம் பாதிப்பட்டுள்ளதற்கும் நிவாரணம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு கூடுதல் நிதியை தமிழக அரசு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதாரத்தை காக்க வேண்டும்.
குடிமராமத்து பணி என்பது பெயருக்கு ஏற்றவாறு அப்பகுதி குடிமக்களை வைத்து விவசாயிகளை இணைத்து குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது பேக்கேஜ் முறையில் யாரோ ஒரு ஒப்பந்ததாரர் மூலம் அலுவலர்கள் இணைந்து பெயரளவில் செய்து முடிக்கின்றனர். அப்பகுதி மக்கள், விவசாயிகள் வைத்து செய்யாத வரை இதுபோன்று வடிகால் பிரச்சினை தீராது. பயிர் காப்பீட்டில் தனியார் ஈடுபட்டுள்ளது, இதனால் இது விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேரவில்லை என்ற கருத்து எங்களிடம் உள்ளது, இதனை அரசே ஏற்று செய்தால் விவசாயிகளின் பல கோடி ரூபாய் தனியார் கொண்டு போவதற்கு தடைபோட முடியும், இதனை அரசு மாற்ற வேண்டும், தமிழகம் புறக்கணிப்படுவது அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு, கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்ட 22 மசோதாக்கள் இருபத்து இரண்டு மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கவர்னர் தமிழ்நாட்டுக்கு எதிராக பேசும் நிலை உள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் தலையீடு செய்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு செயல்படுகிறது என்றார்.