நாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது திருமருகல். இந்த கிராமத்தின் அருகே திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது, தேர் பவனி நடைபெற்றுள்ளது. தேர் பவனியின்போது இளைஞர் ஒருவர் தேரை நிறுத்தி, நிறுத்தி செலுத்தும் பணியில் சக்கரத்தின் முன்பு ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி தேரின் கீழ் விழுந்தார். அப்போது, தேர் சக்கரம் இளைஞரின் வயிற்றின் மீது ஏறி இறங்கியது. இதனால், படுகாயமடைந்த அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தின் களிமேடு பகுதியில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது சப்பரம் மின் கம்பியின் மீது உரசி ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.