தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு பணிகளை பொதுவாக வடமாநிலத்தவர்கள் அபகரிப்பது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் ரயில்வே பணிகள், அஞ்சலகம், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களில் வடஇந்தியர்கள் பலர் பணிக்கு சேர்வது தொடர்ந்து நடந்து வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் நியமிக்கப்படாமல் தொடர்ந்து வடஇந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும் வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கோரிக்கைகளை வைத்தும் கூட எந்த விதமான நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதோடு சில வடஇந்தியர்கள் ஏற்கனவே பொய்யான சான்றிதழ்களை கொடுத்து பணிக்கு சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது மேலும் பல வடஇந்தியர்கள் பொய்யான சான்றிதழ்களை கொடுத்து தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பணிகளில் பணிக்கு சேர்ந்தது அம்பலம் ஆகி உள்ளது.
அஞ்சல் துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்து இவர்கள் பணிக்கு சேர்ந்துள்ளனர். முக்கியமாக ரயில்வே துறையில் பலர் இப்படி சேர்ந்துள்ளனர். அதன்படி வடஇந்திய இளைஞர்கள் பொய்யாக தமிழ்நாட்டில் படித்தது போல சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு தேர்வு துறைக்கு கீழ் வரை பள்ளிகள், கல்லூரிகளில் படித்தது போல இவர்கள் பொய்யான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என்ற புகார் தற்போது எழுந்துள்ள நிலையில்,
Vijay Sethupathi: அஜித் 62 -ல் நான் வில்லனா..? விக்னேஷ் சிவன் இப்படி சொல்லிட்டாரே.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழுவின் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் உள்ள பணியிடங்களில் 20 க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதைக் கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். தமிழ் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்று தபால் நிலையத்தில் தமிழர்களை பணியமர்த்த வலியுறுத்தியும், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ள வடமாநிலத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், வடமாநிலத்தவர்களை பணி அமர்த்திய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். முடிவில் கோரிக்கை மனு தபால் நிலைய அதிகாரியிடம் வழங்கினர்.
Exclusive: ஈரோடு மாணவருக்கு நெல்லூரில் தேர்வு: ரயில்வே தேர்வில் சர்ச்சை- அரசு தலையிடுமா?