நாகை மாவட்டம் வெளிப்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் உமாநாத். இவரது மனைவி சந்தியா தனது பத்துமாத பெண் குழந்தை லக்கிதாவை வீட்டில் உள்ள தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். அப்போது குழந்தை இருந்த தொட்டிலில் மேல்பகுதியில் இருந்த கயற்றில் மாற்றம் தெரிந்துள்ளது. அதனை பார்த்தபோது  தொட்டிலின் மேல் பகுதியை ஓட்டின் வாரையில் 10 அடி நீள பாம்பு  தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் சந்தியா அலறியடித்து வீட்டின் வெளியே ஓடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சாரை பாம்பு தொங்கி கொண்டிருப்பதை கண்டு  உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு  துறை வீரர்கள் பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர்.

 



 

பாம்பு தனது வாயில் எலியை விழுங்கிய நிலையில்  வீட்டின் ஓடுகளுக்கு  இடையே மறைந்து கொண்டது. பாம்பு பிடிக்கும் நவீன கருவியை கொண்டு 10 அடி நீள சாரை பாம்பை  ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். இதனை அடுத்து பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். எலியை விழுங்கியதால் பாம்பு தொட்டியில் இருந்த குழந்தையை தீண்டாமல் இருந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.