தமிழகத்தில் மற்ற துறைகளை விட அரசுக்கு வரக்கூடிய மொத்த வருவாயில் 87 சதவீதம் வணிகவரி மற்றும் பதிவு துறையில் இருந்து வருகிறது என அமைச்சர் பி.மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவித்தார். திருச்சி கோட்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார். கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் மற்ற துறைகளை விட அரசுக்கு வரக்கூடிய மொத்த வருவாயில் 87 சதவீதம் வணிகவரி மற்றும் பதிவு துறையில் இருந்து வருகிறது. இத்துறைகள் மூலம் பெற்றுதர கூடிய வருவாயில் முதல்வர் தமிழகத்தில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்ய முடியும். வணிகவரித்துறையை பொறுத்தவரை ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாயை பல மடங்கு உயர்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள வணிகர்கள் நியாயமாக, நேர்மையாக வணிகம் செய்யும் போது, அந்த ஜிஎஸ்டி வரியை சிலர் போலியாக பில் மட்டுமே கொடுத்து விட்டு அரசுக்கு ஜிஎஸ்டியை செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் மேலாக வணிகர்களுக்கு துறைரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது . அதன்பிறகு 67 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்தது. கடந்த பத்தாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை மூலம் அரசுக்கு ஓராண்டில் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் இருந்த நிலையில் தற்போது 6 லட்சமாக உயர்ந்துள்ளது. உயர் அதிகாரிகள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. செய்யாத 2017 -ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை லோக் ஆயுக்தா கமிட்டி மூலம் தமிழகத்தில் 6 லட்சம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்ததாக தெரியவந்துள்ளது உண்மை. ஆனால் எந்த காலத்தில், யாரால், எங்கு நடந்தது என தெரிவிக்காமல், தற்போது திமுக ஆட்சி காலத்தில் நடந்தது போல கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளில் பலஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்தந்த துறையினர் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்