மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனியைச் சேர்ந்தவர் 74 வயதான குணசீலன். இவருடைய மனைவி 68 வயதான தமிழரசி. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
Sri Lanka issues: கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - இலங்கை விமானப்படையின் முன்னாள் அதிகாரி
இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண ஆன நாள் முதல் இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும் வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இணைபிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளனர்
இந்த நிலையில் திடீர் உடல் நல குறைவு காரணமாக குணசீலன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து 48 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது கணவர் பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவி தமிழரசி அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இருவரின் உயிரிழப்பை தொடர்ந்து அவரது உறவினர்கள், மகன் இளையராஜா வீட்டில் இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்து இருவரின் உடல்களும் அடக்கம் செய்தனர்.
இல்லற வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலக பொதுமறை திருக்குறளில் திருவள்ளுவர் இல்லறவியல் அதிகாரத்தில் மூலம் விளக்கி உள்ளார். இருந்தும், தற்போதைய நவநாகரீக உலகில் திருமணமாகி சில நாட்களிலேயே கணவன் மனைவிகளுக்கு இடையே பல்வேறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விவாகரத்து தேடி நீதிமன்ற வாயிலில் காத்திருக்கும் ஏராளமான கணவன் மனைவிகளுக்கு, கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என ஓர் எடுத்துக்காட்டாக ஒன்றாய் இணைந்து வாழ்ந்தவர்கள் சாவிலும் ஒன்றாய் இணைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்