அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவர்கள் காலை உணவை எப்போதும் தவற விடாதீர்கள். மாணவர்களிடம் நலன் பற்றி நான் தனியாக உரையாடியபோது ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை சாப்பிடவில்லை என கூறினார்கள். 


இதையடுத்து பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையில் நேற்றுதான் கையெழுத்திட்டேன். அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட இருக்கிறது என கூறினார்.  விரைவில் தமிழ்நாட்டில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ள நிலையில்,  காலை உணவு திட்டத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக  காலைச் சிற்றுண்டி திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் 



  • திங்கட்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)

  • செவ்வாய்கிழமை - கிச்சடி வகை ( ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி)

  • புதன்கிழமை - பொங்கல் (வெண் பொங்கல், ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார்)

  • வியாழக்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)

  •  வெள்ளிக்கிழமை - ஏதாவது ஒரு வகை கிச்சடி(ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி) உடன் ரவா கேசரி, சேமியா கேசரி 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண