மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த சுதாகர், சரவணன் ஆகிய இருவரும் தங்களுடைய இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்துவரும்  வடகிழக்கு பருவ மழையால் வயலில் ஒரு அடியில் வேர் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.




இந்த நிலையில் வயலில் தேங்கியுள்ள தண்ணீரில் நீர்க்குமிழி ஏற்படுவது போல் இன்று காலை முதல் தண்ணீர் கொப்பளித்து வருகிறது. வயல் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில்  கொப்பளித்து வருகிறது. சிறு துவாரம் ஏற்பட்டு கொப்பளித்து வருவதை விவசாயிகள் சேற்றைக் கொண்டு அடைத்தாலும் கொப்பளித்து வருவதை நிறுத்த முடியவில்லை. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், தங்கள் பகுதி விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி எரிவாயு கொண்டு செல்லும் கெயில் குழாய் புதைக்கப்பட்டுள்ளதால் எரிவாயு கசிவு அல்லது கெயில் குழாயின் தாக்கத்தால் விவசாய நிலத்தில் உள்ள தண்ணீரில் கொந்தளிப்பு போன்று கொப்பளிப்புகள் ஏற்பட்டு வருகிறதோ என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 


நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதல்வர் - கடம்பூர் ராஜூ




மேலும் இதுகுறித்து வேளாண்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ள விவசாயிகள், உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து எதனால் நிலத்தில் உள்ள தண்ணீர் கொப்பளிக்கிறது என்று கண்டுப்பிடித்து தங்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது விவசாயிகள் தகவல் அளித்துள்ளதாகவும், நேரடியாக சென்று ஆய்வு செய்தால் தான் அதுகுறித்து தெரியும் என்று தெரிவித்துள்ளனர்




இதனைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இச்சம்பவம் அறிந்த கெயில் குத்தாலம் கெயில் நிறுவன தலைமை மேலாளர் நரசிம்மன் தலைமையில் குத்தாலம் மற்றும் காரைக்கால் கெயில் நிறுவன தொழில்நுட்பக்குழுவினர் கழனிவாசல் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். எக்ஸ்ப்ளோசிவ் மீட்டர் மூலம் சோதனை செய்து எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்று உறுதிபடுத்தினர். விவசாயிகள் அச்சமடைய தேவையில்லை என்று தெரிவித்தனர். வேளாண்மைதுறை அதிகாரிகள் கூறுகையில் நீர்குமிழிகள் பொன்று கொப்பளிப்பதால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அறுவடை முடிந்தவுடன் அந்த பகுதியில் மண்பரிசோதனை செய்து ஆய்வு செய்யப்படும் எனவும், இதனால்  விவசாயிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து திருநீறு பூசிய போஸ்டர் ஒட்டியதற்கு மயிலாடுதுறை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தினத்தன்று சங்பரிவார் அமைப்பை சார்ந்தவர்கள் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதாகக் கூறி அவரை இழிவு படுத்தி உள்ளனர் என்றும், சங்பரிவாளர்களின் அமைப்புகளின் ஒன்றான இந்து மக்கள் கட்சி கும்பகோணத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தில் காவி உடை உடுத்தி விபூதி இட்டு அவரை இந்து அமைப்பை சேர்ந்தவர் போல் சித்தரித்து நகரம் முழுவதும் ஒட்டினார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.




இந்நிலையில் இந்த செயலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 12 -ஆம் தேதி தமிழக முழுவதும் சங்பரிவார் மற்றும் இந்து மக்கள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் இந்து மக்கள் கட்சியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


HBD Rohini Molleti: 5 வயதில் முளைத்த காதல்; 53 வயதிலும் தொடரும் சினிமா பயணம்..பிரபல நடிகை ரோகிணி பிறந்தநாள் இன்று!