தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆக பதிவாகி வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து உபரி நீரானது தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் உபரி நீர் திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்து சேர்ந்தது. திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து உபரி நீரானது கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆறு ஆனது டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக பயன்பட்டு வருகிறது மேலும் வெள்ளப்பெருக்கின் போது சுமார் 2 லட்சம் கன அடி வரை தண்ணீரை தாங்கும் தன்மை கொண்டதாகும்.
இந்நிலையில் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது தற்போது கரைபுரண்டு ஓடும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சத்திரத்தை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் இரு கரையும் தொட்டு செல்கிறது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் திட்டுப்பகுதி உள்ளது. இங்கு சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 150 ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து பெருக்கெடுத்து திட்டு பகுதியை தண்ணீர் சூழ்ந்து கொண்தால் ஆடுகளுடன் தவித்து வந்தனர். இதனை அடுத்து தகவலறிந்த சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மூன்று படகுகள் மூலம் ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த கணேசன் மற்றும் அவரது மனைவி காந்திமதி மற்றும் அவர்களது 150 ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
Pooja kannan | சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் சாய்பல்லவியின் தங்கை.. தனுஷ் கொடுத்த அப்டேட்..
மேலும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபடுவதால் தாழ்வான பகுதியில் வசித்தவர்களை பாதுகாப்பாக தங்குவதற்காக அளக்குடி, அனுமந்தபுரம் மற்றும் ஆச்சாள்புரத்தில் நிவாரண முகாம்கள் அமைக்கபட்டுள்ளது. ஒரு சில வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பாதிக்கபட்ட மக்கள் தற்போதே முகாம்களுக்கு வரத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
திருச்சி காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப்படுகொலை :10 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது..