மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதையொட்டி, ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் மற்றும்  பலர் பங்கேற்றனர்.

Continues below advertisement




சமீபத்தில் மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.  இதனிடையே அதனைத் தொடர்ந்து நேற்று காலை மயிலாடுதுறை ஜங்சனில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை, ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Hero Glamour 125: ஒரு லிட்டருக்கு 63 கிலோ மீட்டர் பயணம்.. ஹீரோவின் புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்..Hero Glamour 125: ஒரு லிட்டருக்கு 63 கிலோ மீட்டர் பயணம்.. ஹீரோவின் புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்..




ரயில் இன்ஜின் முன்புறம் மாலை அணிவித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார். முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு  கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.


World Athletics Championships: 4x400 ஓட்டத்தில் ஜஸ்ட் மிஸ் செய்த இந்திய அணி.. 5-வது இடம்.. இந்தியாவின் முழு பதக்க பட்டியல் இதோ!




பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேருகிறது. இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பிடத்தக்கதாகும். சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.