உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலுக்கு பிறகு, இந்தியாவில் அதிகம் எதிர்பார்த்தது ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம்தான். இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த தகுதிச்சுற்றில் இந்திய அணி இரண்டாம் பிடித்து ஃபைனலுக்கு முன்னேறியது.
இந்தநிலையில், ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தய இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்தியாவுக்கான இந்த பந்தயத்தில் அமோஜ் ஜேக்கப், ராஜேஷ் ரமேஷ், முகமது அனஸ் யாஹியா, முகமது அஜ்மல் வரியத்தொடி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியை இந்திய அணி 2 நிமிடம் 59.92 வினாடிகளில் நிறைவு செய்து 5வது இடத்தை பிடித்தனர்.
இந்த ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தது. அமெரிக்கா அணியினர் பந்தயத்தை 2 நிமிடம் 57.31 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தது. அதனை தொடர்ந்து, பிரான்ஸ் 2 நிமிடம் 58.45 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. மூன்றாம் இடம் பிடித்து பிரிட்டன் வெண்கலப் பதக்கம் வென்றது. பிரிட்டன் அணி பந்தயத்தை 2 நிமிடம் 58.71 வினாடிகளில் முடித்தனர். தொடச்சியாக வேகமெடுத்த ஜமைக்கா அணி நான்காவது இடத்தையும், இந்திய அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்தது.
4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. இந்திய வீரர்கள் வரலாறு படைத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்த தகுதிச்சுற்றில் இந்திய அணி 2 நிமிடம் 59.05 வினாடிகளை எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி ஆசிய சாதனையை முறியடித்துள்ளது. ஆசியாவின் முந்தைய சாதனை 2 நிமிடம் 59.51 வினாடிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தடகள சாம்பியன்ஷிப் 2023: இந்தியாவின் பதக்கம் வென்றவர்கள்
தடகள வீரர் | போட்டி | பதக்கம் |
---|---|---|
நீரஜ் சோப்ரா | ஆண்களுக்கான ஈட்டி எறிதல் | தங்கம் |
முழு பதக்க அட்டவணை:
தரவரிசை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | அமெரிக்கா | 12 | 8 | 9 | 29 |
2 | கனடா | 4 | 2 | 0 | 6 |
3 | ஸ்பெயின் | 4 | 1 | 0 | 5 |
4 | ஜமைக்கா | 3 | 5 | 4 | 12 |
5 | கென்யா | 3 | 3 | 4 | 10 |
6 | எத்தியோப்பியா | 2 | 4 | 3 | 9 |
7 | கிரேட் பிரிட்டன் மற்றும் NI | 2 | 3 | 5 | 10 |
8 | நெதர்லாந்து | 2 | 1 | 2 | 5 |
9 | நார்வே | 2 | 1 | 1 | 4 |
10 | ஸ்வீடன் | 2 | 1 | 0 | 3 |
11 | உகாண்டா | 2 | 0 | 0 | 2 |
12 | ஆஸ்திரேலியா | 1 | 2 | 3 | 6 |
13 | இத்தாலி | 1 | 2 | 1 | 4 |
14 | உக்ரைன் | 1 | 1 | 0 | 2 |
15 | கிரீஸ் | 1 | 0 | 1 | 2 |
15 | ஜப்பான் | 1 | 0 | 1 | 2 |
15 | மொராக்கோ | 1 | 0 | 1 | 2 |
18 | பஹ்ரைன் | 1 | 0 | 0 | 1 |
18 | புர்கினா பாசோ | 1 | 0 | 0 | 1 |
18 | டொமினிக்கன் குடியரசு | 1 | 0 | 0 | 1 |
18 | இந்தியா | 1 | 0 | 0 | 1 |
18 | செர்பியா | 1 | 0 | 0 | 1 |
18 | வெனிசுலா | 1 | 0 | 0 | 1 |
24 | போலந்து | 0 | 2 | 0 | 2 |
25 | கியூபா | 0 | 1 | 2 | 3 |
26 | போட்ஸ்வானா | 0 | 1 | 1 | 2 |
27 | பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் | 0 | 1 | 0 | 1 |
27 | கொலம்பியா | 0 | 1 | 0 | 1 |
27 | ஈக்வடார் | 0 | 1 | 0 | 1 |
27 | பிரான்ஸ் | 0 | 1 | 0 | 1 |
27 | இஸ்ரேல் | 0 | 1 | 0 | 1 |
27 | பாகிஸ்தான் | 0 | 1 | 0 | 1 |
27 | பெரு | 0 | 1 | 0 | 1 |
27 | பிலிப்பைன்ஸ் | 0 | 1 | 0 | 1 |
27 | போர்ட்டோ ரிக்கோ | 0 | 1 | 0 | 1 |
27 | ஸ்லோவேனியா | 0 | 1 | 0 | 1 |
37 | சீன மக்கள் குடியரசு | 0 | 0 | 2 | 2 |
37 | செ குடியரசு | 0 | 0 | 2 | 2 |
39 | பார்படாஸ் | 0 | 0 | 1 | 1 |
39 | பிரேசில் | 0 | 0 | 1 | 1 |
39 | பின்லாந்து | 0 | 0 | 1 | 1 |
39 | கிரெனடா | 0 | 0 | 1 | 1 |
39 | ஹங்கேரி | 0 | 0 | 1 | 1 |
39 | லிதுவேனியா | 0 | 0 | 1 | 1 |
39 | கத்தார் | 0 | 0 | 1 | 1 |
39 | ருமேனியா | 0 | 0 | 1 | 1 |
பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதிப் போட்டியில் பருல் சவுத்ரி 11வது இடம் கிடைத்தது. பாருல் பந்தயத்தை 9 நிமிடம் 15.31 வினாடிகளில் முடித்தார். இது தேசிய சாதனையாகும். இந்த சாதனையுடன் பாரூல் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.