மயிலாடுதுறை மாவட்ட ஏழை எளிய மக்களின் முக்கிய மருத்துவமனையாக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் மயிலாடுதுறை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து உள்நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டுகட்டும் பணியில் தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த 53 வயதான ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இதேபோன்று சவக்கிடங்கில் நாகை, ஏனங்குடி பகுதியை சேர்ந்த 42 வயதான அதே பெயர் கொண்ட ரமேஷ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். 




இந்த சூழலில் சவக்கிடங்கில் பணியாற்றும் நாகையை சேர்ந்த ரமேஷ் பணி இல்லாத நேரத்தில் கட்டுகட்டும் பிரிவுக்கு அடிக்கடி வந்து செல்லுவதாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கட்டுகட்டும் பிரிவுக்கு வந்த நாகை  ரமேஷை பார்த்து தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த கட்டுகட்டும் பிரிவில் பணிபுரியும் ரமேஷ்,  நோய்வாய்ப்பட்டவரை போல் இருப்பதாக கிண்டல் செய்துள்ளார். 




இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நாகை ஏனங்குடி ரமேஷை, கரந்தை ரமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏனங்குடி ரமேஷ் தனது மகன்கள் தியாகராஜன் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு வரவழைத்து பணி முடித்து  வீட்டுக்கு கிளம்பிய கரந்தை ரமேஷை, ஏனங்குடி ரமேஷ் தன் மகன்களுடன் சேர்ந்து அடித்து கீழே தள்ளி உள்ளனர்.  இதில் தலையில் பலத்த காயமடைந்த கரந்தை ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மயிலாடுதுறை: சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அசைவ உணவகத்திற்கு சீல்!



மேலும் இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஏனங்குடியை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மகன்களான 21 வயது தியாகராஜன் மற்றும் 19 வயதான தீனதயாளன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மயிலாடுதுறை: 31 சவரன் நகையை தவற விட்ட பெண்மணி - காவல்துறையிடம் கொடுத்த பேக்கரி ஊழியர்கள்