மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்நாளில் இருபது முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். ஒவ்வொரு பயணமும் அவரது வாழ்விலும் இந்தியாவின் வரலாற்றிலும் திருப்பு முனையாக அமைந்தன. ஆடை மாறியது மட்டுமல்ல, அரசியல் மாற்றங்களும் காந்தியடிகளால் தமிழக பயணத்தால் விளைந்தன. 1896ஆம் ஆண்டுக்கும் 1946 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 50 ஆண்டுகளில் இருபது முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். சென்னைக்கு மட்டுமல்ல, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டுமல்ல, காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம், விருதுநகர், கடலூர், தென்காசி போன்ற சிறிய நகரங்களுக்கும்,  சமயநல்லூர், குன்றக்குடி, பலவான்குடி, கோட்டையூர், அமராவதி புதூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர், வேலங்குடி, போன்ற சிற்றூர்களுக்கும் கூடச் சென்றார். ஏன் நீலகிரி மலைப்பகுதிகளில் உள்ள கோத்தகிரிக்கும் அதன் அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்றார். ஒரு முறை பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் வரை சரக்கு ரயிலில் (குட்ஸ் டிரெயின்) பயணம் கூடச் செய்திருக்கிறார்.




இந்நிலையில் தான் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி வந்து இறங்கினார். அப்போது அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். காந்தியை வரவேற்க வந்த மக்கள் அனைவருமே மேலாடை இன்றி வெற்று மார்புடன் காட்சி அளித்தனர். விவசாயிகள் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்த மகாத்மா காந்தியடிகள் வேதனை அடைந்தார். என் தாய்த் திருநாட்டின் விவசாயிகள் மேலாடை இன்றி இருக்கும் போது தான் மட்டும் முழுமையாக ஆடை உடுத்துவதா என தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே மகாத்மா காந்தியடிகள்,  இந்தியாவின் கடைசி விவசாயி எப்போது முழுமையாக ஆடை அணிகிறானோ, அதுவரை தானும் முழு ஆடை அணியப் போவதில்லை என்று அரை ஆடைக்கு மாறினார். பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறி போனது. இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் இன்றுடன் முடிவடைகிறது. 





Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


இந்நிலையில் மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் கடந்தும் தங்கள் நிலைமை இன்னமும் மாறவில்லை என கூறி மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவ சிலைக்கு மேல் சட்டை இல்லாமல் அரை ஆடையுடன் மாலை அணிவித்து விவசாயிகள் முறையிட்டனர்.  இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


 


ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 18 குடும்பங்கள்’ - மயிலாடுதுறையில் தொடரும் அவலம்...!