திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐடியூசி உள்ளாட்சித் துறை பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கிராம ஊராட்சியில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்கள் எந்த பெயரில் வைக்கப்பட்டிருந்தாலும் ஊதியம் வழங்கிய வங்கி கணக்கு ஆவணத்தை அடிப்படையாக கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணி நிரந்தர படுத்தப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுறுத்தினர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா பெருந்தொற்று தொடர்புடைய பணியில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.



1992 முதல் பணியமர்த்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவரின் தொகுப்பூதியம் ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களுக்கு 2013 முன்பு மற்றும் பின்பு பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் அரசு விதிகளை பின்பற்றி மாதாந்த சம்பளத்தை முறையாக கணக்கிட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் உத்தரவுப்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி ஓய்வுக்கான மாதம் ஓய்வு ஊதியம் 2000 மற்றும் சிறப்பு தொகை 50 ஆயிரம் உடனடியாக வழங்கிட வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி அடையாள அட்டை வழங்க வேண்டும்.

 

கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் முழுநேர பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பென்ஷன் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை காவலர்கள் அனைவரும் அன்னக்கூடை, கூட்டுமார், கையுறை, காலனிகள் ஆகியவை அவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 1992ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகையை கணக்கிட்டு உடன் வழங்கிட வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 3600 காலதாமதம் படுத்தப்படாமல் மாதந்தோறும் ஐந்தாம் தேதிக்குள் வழங்கிட வேண்டும்



முன் களப்பணியாளர்கள் பட்டியலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குபவர்களையும் இணைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் பிஎப் ஈஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பதிவேடு செயல்படுத்துவது உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்