விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை என்.எச்.45 (ஏ) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக விவசாயிகள் மற்றும்  இடஉரிமையாளர்களிடம் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு  உரிய இழப்பீடு தொகை இதுநாள் வரை வழங்காமல் இடத்தை கையகப்படுத்தி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கிடாரங்கொண்டான் ஊராட்சி சங்கிருப்பு கிராமத்தில் போடப்பட்ட வீட்டுமனையான குருநகரில் 10 ஆண்டுகளுக்கு முன் அரசு நிர்ணயம் செய்த விலையின்படி 1 சதுரஅடி 33 ரூபாய்க்கு பொதுமக்கள் பலரும்  வாங்கி அதனை பதிவுத்துறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த  இடத்திற்கு 1 சதுரஅடி 3 ருபாய் 50 காசுகள் வழங்கி வலுக்கட்டாயமாக நில உரிமையாளர்களிடம் இருந்து இடம் கையகப்படுத்தப்பட்டதாக நில உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் இடத்திற்கு மூன்று மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறாது என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.


MS Dhoni Treatment: என்னாச்சு நம்ம "தல"க்கு..? நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெறும் தோனி...!




இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை தங்களது நிலங்களில் எவ்வித சாலை பணியை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து தங்களுக்கு சொந்தமான இடங்களில் 7 மாதங்களுக்கு முன்பு பதாகைகள் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று குருநகரில் உரிய இழப்பீட்டு தொகை வழங்காமல் நான்கு வழிச்சாலைக்காக ஜேசிபி வாகனம் மூலம் இடத்தை சமன்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 


IND vs ENG 5th Test: எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி மழையால் நிறுத்தம்...! இந்தியா நிதான ஆட்டம்..!




இதனை அறிந்த இட உரிமையாளர்கள், தங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் பணிகளை தொடங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தி ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்தனர். தங்களுக்கு வழங்கவேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்கினால் மட்டுமே நான்கு வழிசாலை பணி செய்ய அனுமதிப்போம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் போராட்டத்தை தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு பணியாளர்கள் திரும்பி சென்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண