நாளுக்கு நாள் சீர் கெட்டுப் போகும் சீர்காழி நகராட்சியால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளது. இந்த இரண்டு நகராட்சிகளிலும் நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்தவர்கள் பதவி வகுத்து வருகின்றனர். இந்த சூழலில் சீர்காழி நகராட்சி நாளுக்கு நாள் மிகவும் சீர் கெட்டு வருவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து சீர்காழி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் என்ற காரணத்தினால் நகராட்சி நிர்வாகம் ஆணையரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அரசு அலுவலரான ஆணையர் இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை முறையாக பூர்த்தி செய்து வந்தார்கள். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவர் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒவ்வொரு பணிகளும் நடைபெறும் சூழல் நிலவுவதால், தற்போது எந்த ஒரு அடிப்படை தேவையும் சீர்காழியில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரு மின்விளக்கு பிரச்சனை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியான குப்பைகள் அள்ளும் பணியும் சரிவர நடைபெறாமல் பல இடங்களில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது.
இதுவரைக்கு நகர மன்ற கூட்டத்தில் ஒரு சில நகர வார்டு உறுப்பினர்கள் குரல் எழுப்பினாலும் அதற்கு நகர மன்ற தலைவர் செவி சாயிப்பதாக தெரியவில்லை, மேலும் ஒவ்வொரு நகர மன்ற கூட்டத்திலும் சீர்காழி நகராட்சி குறித்து பல்வேறு பிரச்சனைகளை உறுப்பினர்கள் வெளிக்கொண்டு வருவதால், பிரச்சினைகள் மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக நகர மன்ற கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகவும் ஒரு சில உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் மீதும் ஆணையர் மீதும் புகார்களை தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீர்காழி நகராட்சி எல்லையை குறிக்கும் எல்லை பலகையை கூற முறையாக பராமரிக்காமல், பல ஆயிரம் ரூபாய் செலவில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆன சீர்காழி நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என வைக்கப்பட்ட பலகை தற்போது பிடுங்கி எறியப்பட்டு குப்பை தொட்டியில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனை காணும் சீர்காழி நகராட்சிக்குள் புதியதாக வரும் வேலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்படியும் ஒரு நகராட்சி நிர்வாகமா? என கேள்வி எழுப்பியவாறு செல்கின்றனர். மேலும் தெரு விளக்கு எரியவில்லை என பொதுமக்கள் இரவில் தீப்பந்தம் ஏற்றிய சம்பவம், தரைகடை சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிக்கு லட்சம் வாங்கிய புகார்களும், தொடர்ந்து சரிவர குப்பைகள் அள்ளப்படாமல் உள்ள என பொதுமக்கள் பிரச்சினை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் செயல்பாட்டு வரும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மிகவும் ஆபத்தான நிலையில் செயல்படுவதாகவும் இதனை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகைப்படங்களுடன் சமூக ஆர்வலர் ஜெகசண்முகம் என்பவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ருந்தார். ஆனால் அது குறித்து இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் சீர்காழி நகராட்சியும், அதிகாரிகளும் எடுக்காத வில்லை என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ள நிலையில், நகராட்சி பள்ளியில் மேற்கூரை இடித்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி துறையூர் கிராமத்தில் சீர்காழி நகராட்சியின் 21 வார்டில் நகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று வழக்கம் போல பள்ளி திறந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இந்த சூழலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்க சமையலர்கள் ஆயத்தம் ஆகியுள்ளனர். அப்போது சத்துணவு கூடம் கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் கான்கிரட் காரை சத்தத்துடன் பெயர்ந்து விழுந்து. இதில் மாணவர்கள் வகுப்பறையில் இருந்ததாலும், கட்டிடத்தின் உள்ளே யாரும் இல்லாததால் சமையளர்கள் உயிர் தப்பியுள்ளனர். மேலும், இக்கட்டிடம் கடந்த 1976 ஆண்டு கட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த 47 ஆண்டுகளாக அந்த பழைய கட்டிடம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்ததை புது கட்டிடத்தை கட்டி தர பலமுறை நகராட்சி கூட்டத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தற்போது திடீரென இடிந்து விழுந்தது நேரத்தில் 16 மாணவரும் வகுப்பறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர். மதிய உணவு இடைவேளையின் நேரத்தில் விழுந்திருந்தால் மாணவர்கள் பாதித்திருக்க கூடும் எனவும் அச்சத்துடன் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி இல்லாமல் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் , உடனடியாக மாணவர்களின் நலனை அக்கரை கொண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.