மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. திமுகவைச் சேர்ந்த துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் நகரமன்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் சீர்காழி நகராட்சியில் மாதாந்திர கூட்டம் முறையாக நடத்தப்படாமலும்,  டெண்டர் விடப்பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் செய்யப்படுவதாகவும், சுகாதார வசதி, அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை, குப்பை நகராட்சியாக சீர்காழி உள்ளதாக கூறி  கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நகரமன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் 19 ஆம் தேதியான இன்று நகராட்சி நகர்மன்ற கூட்டம் நடத்தப்படும் என்று வார்டு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த  நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நகரமன்ற தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சீர்காழி நகராட்சி நகர மன்ற கூட்டத்தை நடத்த வலியுறுத்தி திமுக, அதிமுக, மதிமுக, பாமக, சுயேட்சை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 12 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அடுத்த மாதம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சீர்காழியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளவில்லை என்றும்,


India Corona Spike: இந்தியாவில் ஒரே நாளில் 11,692 பேருக்கு கொரோனா பாதிப்பு.. குறைந்ததா தொற்று.. நிலவரம் என்ன? முழு விவரம் இதோ..




12 நகரமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு முறைகேடு நடைபெறுவதாகவும், உடனடியாக நகர மன்ற கூட்டத்தை நடத்தி  வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்த வேண்டும், சட்டநாதர்கோயில் கும்பாபிஷேகத்திற்கு பொது உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், சீர்காழி நகராட்சி குப்பைகளை அள்ளாததால் சீர்காழி நகராட்சியை சேர்ந்த 12 வார்டு உறுப்பினர்களும் தூய்மை பணி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?




இதுகுறித்து மகாத்மா கூறுகையில், கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் அதிகாரிகள் நகராட்சி பணிகளை முறையாக செய்து வந்தனர். ஆனால் தற்போது மக்கள் ஓட்டு போட்டு தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்த நிலையில் மக்களுக்கான எந்த பணியும் சீர்காழி நகராட்சியில் நடைபெறவில்லை என்றும், குறிப்பாக குப்பை அல்லாமல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக குப்பை நகர் சீர்காழி என்ற பெயரை எடுத்து வருகிறது என வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.


Vegetable Price: மாங்காய் சீசன் ஸ்டார்ட் ஆயிடுச்சு மக்களே.. கிலோ ரூபாய் 15 மட்டுமே.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண