மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு மெயின் லைன் என்று அழைக்கப்பட்டு முக்கிய வழித்தடமாக விளங்குகிறது. நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு நேற்று இரவு 11.45 மணிக்கு வந்தடைந்துள்ளது. அப்போது கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் முதலாவது நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது பயணி ஒருவர் எஸ் 5 கோச்சில் ரயில் நிற்பதற்கு முன்பு ஓடி சென்று ஏறி உள்ளார்.




அப்போது அந்தப் பயணி படியில் ஏறும் போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார், அதில் அவருடைய ஒரு கால் நடைமேடைக்கும் ரயிலுக்கும்  இடைவெளியில் சிக்கியுள்ளது.  இந்த சம்பவத்தை பார்த்த அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதிர்குமார் துரிதமாக செயல்பட்டு தவறி கீழே விழுந்த பயணி முழுவதுமாக விபத்தில் சிக்குவதற்கு முன்பு காப்பாற்றினார். இதில் லேசான காயங்களுடன் அந்த பயணி உயிர் தப்பினர். மேலும் அந்த பயணி  முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இடம் கிடைக்குமா என்பதற்காக எஸ் 5 பெட்டியில் நின்ற டிக்கெட் பரிசோதகரை பார்த்ததால் அவரிடம் கேட்பதற்காக ஓடிச்சென்று ஏறியது தெரியவந்தது. 




தொடர்ந்து, ரயிலில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.பி.எப் போலீசார் அறிவுறுத்தி அதே ரயிலில் அந்த பயணியை அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதிர்குமார் கூறுகையில், ரயில் நிற்பதற்கு முன்பும், புறப்பட்டு செல்லும்போது ஓடிச்சென்று ரயிலில் ஏறினால் இது போன்ற விபத்துக்களை சந்திக்க நேரிடும், ரயில் நின்றவுடன் பயணிகள் இறங்கவும், ஏறவும் வேண்டும், படியில் பயணம் செய்யக் கூடாது, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


Kalaignar Womens Assistance Scheme: மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பத்தை எங்கு, எப்படி கொடுப்பது? - நெறிமுறைகளை வெளியிட்ட அரசு




துரிதமாக செயல்பட்டு தடுமாறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதீர் குமாருக்கு  அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் பல முறை இதுபோன்று விபத்தின் போது ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதீர் குமார் காப்பாற்றியுள்ளது குறிப்பிட்டதக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.