மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பொய்கை வளர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தகராறு செய்தது தொடர்பான புகாரின் பேரில் பாலையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை காவலர்கள் விசாரணைக்காக பாலையூர் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இளைஞர்களுக்கு ஆதரவாக கோனேரிராஜபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதியழகன், திமுக பிரமுகர் முருகன் ஆகியோர் பாலையூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
ODI World Cup 2027: இன்னும் நான்கு ஆண்டுகளில் உலகக் கோப்பைத் திருவிழா! எந்த நாடு நடத்துகிறது..?
அப்போது அந்த இளைஞர்களை காவல்துறையினர் அடித்ததாகவும், அதனை தடுத்த திமுக பிரமுகர் முருகனையும் காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம திமுகவினர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரை கண்டித்து பாலையூர் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை விலக்கிக் கொண்டனர். இதனால் காரைக்கால் - கும்பகோணம் இடையே போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதேபோன்று திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி சீர்காழியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் வாசலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும், மழையால் டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் அதற்கு உரிய கணக்கெடுப்பது நிவாரண வழங்க வேண்டும், கடல் நீர் உட்புகுந்து கடல் நீர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 15 கிமீ தூரம் நிலத்தடி நீர் உப்பாக மாறி குடிநீர் தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் தடுப்பணை கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Salem Book Fair: சேலத்தில் தொடங்கியது புத்தக திருவிழா; எத்தனை அரங்குகள், பதிப்பகங்கள் விவரம் இதோ