மயிலாடுதுறை அருகே விவசாய பணிகளுக்கு இடையூறாக இருந்த வாய்க்கால் கரை ஆக்கிரமிப்பை போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையினர் அகற்றியுள்ளனர். தமிழகத்தில் அரசு பொறம்போக்கு நிலம், கோயில் நிலம், அடுத்தவருக்கு உரிய நிலம் என எவ்வித பாகுபாடும் இன்றி ஆக்கிரமிப்பு செய்யும் மனநிலை பெரும்பாலான நபர்களிடம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவதும், அதனை தொடர்ந்து அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும் என ஒரு தொடர் கதை இது இருந்து வந்தாலும், ஆக்கிரமிப்புகளை தடுப்பதும், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது என்பது அரசால் முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.


18 Years of Sivakasi: பட்டாசாய் வெடித்த விஜய்.. மேஜிக் காட்டிய பேரரசுவின் கதை.. “சிவகாசி” படம் வெளியாகி 18 வருஷமாச்சு..!18 Years of Sivakasi: பட்டாசாய் வெடித்த விஜய்.. மேஜிக் காட்டிய பேரரசுவின் கதை.. “சிவகாசி” படம் வெளியாகி 18 வருஷமாச்சு..!





இந்நிலையில் மயிலாடுதுறை அருகே விவசாயிகளுக்கு இடையூறாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த சக விவசாயிடம் இருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மூவலூர் சந்திக்கரை வாய்க்கால் மூலம் அப்பகுதியை சேர்ந்த பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் இந்த வாய்க்கால் கரையில் மூவலூர் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் விவசாயப் பணிகளுக்கு இடையூறாக வேளாண் இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். 


Today Rasipalan, November 01: தொடங்கியாச்சு நவம்பர் மாதம்.. இந்த நாள் யாருக்கு லக்?.. இன்றைய ராசிபலன்கள் இதோ..!




இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையின் பெயரில் மூவலூர் சேர்ந்த காவிரி பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் ராமமூர்த்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை அடுத்து நீதிமன்ற உத்தரவுபடி வாய்க்கால் கரையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 18 சதுர மீட்டரில் இருந்த தென்னை மரங்களையும், மின் இணைப்பை துண்டித்து பம்பு செட்டுக்கு போடப்பட்டிருந்த  கான்கிரீட் ஸ்லாப் சுவரையும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணதாசன் தலைமையிலான பணியாளர்கள்  அகற்றி எடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் நிலவியது.


Petrol, Diesel Price: பூமிக்கு பக்கத்துல வீனஸு.. ஆனதா பெட்ரோல் விலை மைனஸு..? இன்றைய நிலவரம்..!