மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் 350 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.  மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 350 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று யோகங்கள் செய்து அசத்தினர்.




போட்டிகளில் எட்டு வயதுக்குட்பட்டோர் முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் வரை என மொத்தம் ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. பத்மாசனம், யோகமுத்ரா, சானுசீரானம், சலபாசனம், வக்ராசனம், உட்கட்டாசனம், அர்த தனுராசனம், பீடாசனம் சூர்யநமஸ்காரம், தடாசனம், ஜனுசிராசனம், கோமுகாசனம், குக்குட்டாசனம், உஷ்ட்ராசனம், சித்தாசனம், பர்வதாசனம், மண்டூகாசனம், தண்டாசனம், வீராசனம், பாதபத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு விதமான யோகாசனங்களை மாணவ மாணவிகள் செய்து காண்பித்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினர்.


Ukraine Defence Minister: போருக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - உக்ரைன் அதிபர் அதிரடி, ரஷ்யாவிற்கு சாதகமா?




முன்னதாக சிறுவர் சிறுமியர் தனித்தனியே மற்றும் இருவராக இணைந்து பல்வேறு விதமான சாகசங்களை செய்து காண்பித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான நடைபெறும் யோகாசனம் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.