மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான தியாகராஜன். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 25 வயதான பிரவினா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனை அடுத்து, பிரவினா கருவுற்றுள்ளார்.
UPSC Mains 2022: செப்டம்பரில் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள்: முழு அட்டவணையை வெளியிட்ட யூபிஎஸ்சி
கருவுற்ற நிலையில் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியம் குறித்து பிரவினா மகப்பேறு மருத்துவரை அணுகியுள்ளார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் 3 கருக்கள் வளர்வது தெரியவந்தது.
இந்த தகவலை அறிந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரவினாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர். மேலும், சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தனர்.
இந்நிலையில் 9 மாதங்கள் கடந்த நிலையில் பிரவினாவிற்க்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதித்தனர். ஒரு வாரம் பிரவினா சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை செய்து 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்தன.
நடிகை யாஷிகா ஆனந்த் நிகழ்ச்சியில் 'Ramp walk' சென்ற 5 போலீசார் டிரான்ஸ்பர் - இதான் காரணம்...!
ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் (இன்குபேட்டரில்) வைத்து குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வந்தனர். தற்போது மருத்துவர்கள் உறவினர்களிடம் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக இன்னும் ஒரு சில தினங்களில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்