UPSC Civil Services Mains Exam Date 2022: செப்டம்பர் மாதம் 16,17,18,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் நடைபெறும் என்று யூபிஎஸ்சி (UPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.


தேர்வு முறை எப்படி?


முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.


ஜூனில் முதல்நிலைத் தேர்வு


2022ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் ஜூன் 5 ஆம் தேதி அன்று இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஜி.எஸ். முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் ஜி.எஸ். 2ஆவது தாள் எனப்படும் சிசேட் தேர்வு 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெற்றது. இந்நிலையில், முதன்மைத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் வெளியாகி உள்ளன. 




இதன்படி, செப்டம்பர் மாதம் 16, 17, 18, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மதியம் 2 முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது. 









அடுத்த நாள் 17.09.2022 (சனிக்கிழமை) அன்று இரண்டாம் தாளுக்கான தேர்வு (General Studies-I) நடைபெறுகிறது.  அதே நாளில் பிற்பகல் மூன்றாம் தாளுக்கான தேர்வு (General Studies-II) நடைபெறுகிறது.  


செப்டம்பர் 19ஆம் தேதி 18.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) நான்காம் தாளுக்கான தேர்வு (General Studies-III) நடைபெறுகிறது. அதே நாளில் பிற்பகல் ஐந்தாம் தாளுக்கான தேர்வு (General Studies-IV) நடைபெறுகிறது.  


அடுத்த வாரத்தில் 24.09.2022 (சனிக்கிழமை) இந்திய மொழித் தேர்வு நடைபெறுகிறது. 
அஸ்ஸாமி / பெங்காலி / போடோ / டோக்ரி/ குஜராத்தி / இந்தி / கன்னடம் / காஷ்மீரி/ கொங்கனி / மைதிலி / மலையாளம் / மணிப்பூரி / மராத்தி / நேபாளி / ஒடியா / பஞ்சாபி / சமஸ்கிருதம் / சந்தாலி (தேவநாகரி / ஒல்சிகி ஸ்கிரிப்ட்)/  சிந்தி (தேவநாகரி / அரபு எழுத்து) / தமிழ் / தெலுங்கு / உருது ஆகிய மொழிகளில் ஒன்றுக்குத் தேர்வு நடைபெறுகிறது. அதே நாள் பிற்பகலில் ஆங்கில மொழித் தேர்வு நடைபெறுகிறது.


செப்டம்பர் 25ஆம் தேதி இரு வேளையும் விருப்பத் தெரிவுப் பாடத்துக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண