மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில், மயூரா மாடலிங் என்ற தனியார் அமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  ‘பேஷன் ஷோ" நடைபெற்றது. இந்த போட்டியை பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் ஆகிய நான்கு வகையாக இந்த அழகு போட்டி நடைபெற்றது. 





போட்டியில் ஏராளமான சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் பல வடிவமைப்பு வண்ண உடைகளை அணிந்தபடி Ramp Walk எனப்படும் ஒய்யார நடை நடந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாக பரவசப்படுத்தியது. அப்போது போட்டியாளர்களின் வற்புறுத்தலால் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர், சிங்கம் படத்தின் பின்னணி இசைக்கு ஏற்ப கம்பீரமாக நடந்து சென்றனர். இதுபார்வையாளர்களின் பாராட்டை பெற்றது. 




காவல்துறையினர் பல்வேறு மன அழுத்தங்களுக்கு மத்தியில் பணியில் ஈடுபட்டு வந்த சூழலில், அவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதுபோன்ற சூழலில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, பார்வையாளர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களும் ரேம்ப் வாக் நடந்து சென்றது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


 




இருந்த போதிலும், இந்நிகழ்ச்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகியதை அடுத்து, இது தொடர்பாக ஒருசிலரால் எதிர்மறையான கருத்துகள் எழுந்து பெரும்  சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரேணுகா, அஸ்வினி, நித்தியசீலா, சிவனேசன் உள்ளிட்ட ஐந்து பேரை அவர்கள் பணியாற்றிய செம்பனார்கோயில் காவல் நிலையத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையத்திற்கு நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்வதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


Baakiyalakshmi Serial: விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் ... அதிர்ச்சியில் கோபி...என்ன செய்யப்போகிறார் பாக்யா?


நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து, மூன்று காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றப்பட்ட போதிலும், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாகப்பட்டினத்தில் இருந்தே இன்னமும் வெளியிடப்பட்டு வருவதால், இந்த உத்தரவை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண