மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக மூத்த முன்னோடி உறுப்பினர்கள் ஆயிரம் பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளி 60 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை அனைவருக்கும் தனது கைகளிலேயே வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பறை இசை நடனம், ஆடும் கரகத்துடன் ட்ரம்ஸ் அடித்து மேளதாள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் உதயநிதியை வரவேற்கும் விதமாக விழா மேடை செல்வது வரை வாயிலில் இருந்து நூற்றுக்கணக்கான கரும்புகள், வாழை மரங்களை கட்டி மங்களகரமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு சென்றவுடன் நலத்திட்ட உதவிகளை வாங்கிய திமுகவினர் மற்றும் பொதுமக்கள் வாழைத்தாறுகளையும் கரும்புகளையும் போட்டி போட்டுக் கொண்டு பிடுங்கி எடுத்து சென்றனர். ஒவ்வொரு வாழை மரத்திலும் பெரிய பெரிய வாழைத்தார்கள் இருந்ததால் வாழைத்தார்களை ஒரு சிலர் அருவாளால் வாழைத்தாறுகளை வெட்டி பிரித்து எடுத்து தூக்கி சென்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.