மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் இல்லாமல் அந்த குழந்தை பிறந்ததால், அவரது கணவர் முருகன் மனைவியுடன் சண்டையிட்டு குடும்பத்தைவிட்டு பிரிந்துசென்றுவிட்டார். 




இந்நிலையில், சிரமமான சூழ்நிலையில், ராணி குழந்தைகளை பராமரித்து வருகிறார். இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, அவருக்கு செம்பனார்கோயில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் கஞ்சாநகரம் அய்யனார் குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமன ஆணை கடந்த 18 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.


Rohit Sharma Record: ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா.. மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்..!




இந்நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த "நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை" சார்பில் நேற்றி அதன் ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் தலைமையில் கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள ராணி இல்லத்திற்கு சென்ற குழுவினர், குழந்தை பாலாஜியை பார்வையிட்டு குழந்தையின் தாய் ராணியிடம் வைப்பு நிதியாக 11,000 ரூபாயை வழங்கினர். மேலும், குழந்தை பாலாஜியின் எதிர்கால மருத்துவ செலவிற்கும், செயற்கை கை கால்கள் பொருத்துவதற்கும் நாங்களும் இருக்கிறோம் அறக்கட்டளை குழு உள்ளதாகவும் தெரிவித்து தாயிடம் ஆறுதல் கூறிய அவர்கள், ராணிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்‌.




மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கொரவ விரிவுரையாளர்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒன்றாக இன்று  கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  




இதில் பொறுப்பாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரியும் , சம வேலைக்கு தகுந்தாற்போல் சம ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும் , யுஜிசியில் தகுதி பெறுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும், அரசாணை 56 -ஐ நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 




தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரி வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி  பதாகைகளை ஏந்தியவாறு  கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிடில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முன்னாள் அமைச்சர்களுடன் சேலத்தில் இபிஎஸ் ஆலோசனை