தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் கிடைக்கும் இடத்திற்கு முகவரி கேட்பதில் தகராறு - இளைஞர் அடித்து கொலை; உறவினர்கள் மறியல்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TASMAC Price: ‘குடி’ மகன்களின் கவனத்திற்கு...! டாஸ்மாக் மதுபான விலை உயர்வு இன்று முதல் அமல்....!
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை பதிவானதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அறிவுத்தப்பட்டுள்ளது.
Tech Tips 4 : உங்க வீட்டு வைஃபை ஸ்லோவா இருக்கா? சொதப்புதா? இதப்பண்ணா ஸ்பீடு அள்ளும்..!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சின்னங்குடி, சந்திரபாடி, குட்டியாண்டியூர், மழையார், திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், கீழ மூவர்க்கரை, பூம்புகார் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 5 நாட்களாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லமால், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையேற்றி வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று தற்போதும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.