மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு வெடிகள் தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்து நான்கு பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அடுத்த தில்லையாடி காளியம்மன் கோயில் தெருவில் அப்பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான அரசு அனுமதி பெற்ற ராமதாஸ் என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 7  தொழிலாளர்கள் அங்கு நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். 



அப்போது வெடி தயாரிப்பின் போது எதிர்பாராத விதமாக திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது, இதில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த மதன், நிக்கேஷ் , ராகவன் தொழிலாளர்கள் மற்றும்  அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் ஆகிய நான்கு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மணிவண்ணன், பக்கிரிசாமி, மாரியப்பன், மாசிலாமணி ஆகியோர் படுகாயங்களுடன் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடலின் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு இடங்களில் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு உடல் பாகங்கள் சிதறியுள்ளன.


கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி தாய், மகன், கர்ப்பிணி மகள் உயிரிழந்த சோகம் - என்ன நடந்தது..?




இதன் காரணமாக அப்பகுதியில் அருகில் இருந்த வீடுகள் குலுங்கின புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வேறு யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்த வெடி விபத்து தொடர்பாக பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும்  நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர்  ஹர்ஸ்சிங் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை நிலவி வருகிறது.


ENG vs NZ WC 2023: உலகக்கோப்பை திருவிழா நாளை தொடக்கம்.. வெற்றியுடன் தொடங்கப்போவது இங்கி.? நியூசி.?