தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக அரசு சார்பில் மாநில முழுவதும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பருவமற்ற காலங்களில் பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் இந்த வகை கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக அமைகிறது.  இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் திடீர், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடுமையான மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத் துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை சுற்றறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், மழைப் பொழிவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்புகளும், குறிப்பாக டெங்கு காய்ச்சலும் அதிகமாக பதிவாகி வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக உள்ளது. எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

Continues below advertisement

Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

அவ்வாறு இல்லாவிடில் அவர்களுக்கு உரிய விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொது மக்கள், நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறலின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு 500 ரூபாய் வரை ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தின் டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து தகவலை மயிலாடுதுறை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு பகிர்ந்துள்ளார். அதன்படி  இந்தாண்டு கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 127 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டள்ளது. அதில் 121 பேர் சிகிச்சை பெற்று பூரண  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் சீர்காழி  மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் 6 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாதம் மட்டும் 28 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் டெங்கு உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி: அம்மா உணவகத்திற்கு புதிய பொருட்களை வழங்கிய சீர்காழி நகராட்சி!

டெங்கு பாதிப்பு பரவலை அடுத்து அடுத்து மாவட்டம் முழுவதும் அரசு சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள், தேங்காய் ஓடுகள், பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.