தமிழகத்தில் கடைசி 38வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமும் மீன்பிடித் தொழிலும் இருந்து வருகிறது. காவிரி கடைமடை மாவட்டம் என்பதால் பெருமளவு காவிரி நீர் மட்டுமின்றி, நிலத்தடி நீர் மூலம் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அதனை நம்பி மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு போதிய காவிரி தண்ணீர் வராத சூழலிலும் நிலத்தடி நீரைக் கொண்டு செய்து முடித்தனர்.
காங்கிரஸை எதிர்ப்பது போன்று காட்டி பிஜேபியை ஒழிக்க வேண்டும் - திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு!
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நடவு பணிகள் துவங்கியுள்ளன. தற்போது 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீரை கொண்டு நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி தண்ணீர் இன்றி 250க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் சம்பா பயிர்கள் கருகி வருகிறது. சம்பா பயிர்கள் நட்டு ஒருமாதமாகியுள்ள நிலையைில் பயிர்கள் 1 அடி அளவிற்கு வளர்ந்து இருக்க வேண்டும். ஆனால், காவிரியில் தண்ணீர் வராததாலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
TNPSC Group 4 Exam: குரூப் 4 தேர்வு இறுதி விடைத்தாளை உடனே வெளியிடுக: உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனால் பம்பு செட்களில் தண்ணீர் அளவு குறைந்து, உப்பு கரைசலாக வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொன்னூர் கிராமத்தை சேர்ந்த அகோரம் என்ற விவசாயி கூறுகையில், 35 ஏக்கரில் உமாரகம் சம்பா பயிரை 25 ஏக்கரில் நடவு செய்துள்ளேன். நடவு செய்து ஒரு மாதம் ஆன நிலையில் 25 ஏக்கரில் பயிர்கள் வளராமல் தரையோடு தரையாக கருகி உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்து பயிர்களை காப்பாற்ற முயற்சி செய்தும் பயனில்லை. இதுவரை ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் பயிர்கள் வளராமல் கருகி வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக கூறும் விவசாயி, உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
TN Assembly: வணிக வரி தொடர்பாக சமாதான திட்டம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..