மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் குத்தாலம் பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய அரசு தவறான பொருளாதாரக் கொள்கையையும், மக்கள் விரோத போக்கையும் கடைப்பிடிப்பதாக கூறி அதனை கண்டிக்கும் வகையில் மக்கள் விசாரணை மன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மோடியைப் போல் வேடமணிந்த ஒருவரை கூண்டில் நிற்கவைத்து, அவரை குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவது போன்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு சென்று பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, பாரத பிரதமரை இழிவுபடுத்தி நிகழ்ச்சி நடப்பதாக கூறி, பாரத பிரதமரின் வேடமணிந்த நபரிடம் சென்று முகமூடியை அவிழ்க்க முற்பட்டார். அப்போது அவருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு அது பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் புகழேந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்டார்.
இதனை அறிந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று திரண்டு குத்தாலம் கடைவீதியில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த போராட்டத்தால், மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மேலும் மோதல் ஏற்பட்டுவிடுமோ என குத்தாலம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
காவிரி படுகையை குறிவைக்கும் எரிவாயு நிறுவனங்கள் -எச்சரிக்கும் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு
இதனை அடுத்து அங்கு காவல்துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டு கலவரம் ஏற்படாமல் பாதுகாப்பு போடப்பட்டது. பாஜக நிர்வாகியை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்ததின் பேரில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இது தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் அகோரம், மயிலாடுதுறை நகர தலைவர் மோடி.கண்ணன், ஒன்றிய தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பாரதிய ஜனதா கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் மாவட்டம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 18 குடும்பங்கள்’ - மயிலாடுதுறையில் தொடரும் அவலம்...!