மயிலாடுதுறையில் மீத்தேன்திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-




காவிரி படுகையை அழித்துவிட எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் துடியாய் துடிக்கின்றன. கடந்த  செப்டம்பர் 3ஆம் தேதி  அன்று இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை எண்ணெய் - எரிவாயுக் குழாய் எடுத்து செல்லக்கூடிய குழாய்களை நிலத்தடியில் அமைக்கப்படும் என்றும், அதற்காக 6 மாவட்டங்களில் இப்போது நிலத்தடி குழாய் அமைக்க இருப்பதாகவும், அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது. 




இந்த அறிவிப்பு வெளியான செப்டம்பர் 3 ஆம் தேதியிலிருந்து,  21 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட இருக்கும் நிலங்களின் குழாய்கள் பதிக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய இடத்தை வழங்குவதில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. கடலூர் கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் 14 வட்டங்களில் 77 ஊர்களில் பலநூறு விவசாயிகளின் நிலத்தில் குழாய்களை பதிக்க உள்ளனர். 




இந்த குழாய்களை பதித்துவிட்டால் 99 ஆண்டுகள் வரை இடத்தின் பயன்பாட்டு உரிமையை அந்த நிறுவனம் பெற்றுவிடும். குழாய் பதித்துவிட்டால் மரம்நடுதல், கிணறு அமைத்தல் கான்கிரிட் கட்டிடம் எதுவும் அமைக்க முடியாது. அதுமேல் வாகனங்கள் சென்று குழாயில் கசிவு ஏற்பட்டால் 3 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று விதிமுறைகளை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இதனை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. காவிரிபடுகை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்ற சட்டத்தை தமிழக அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆனால் இதை மதிக்காமல் எண்ணை நிறுவனங்கள் அடாவடி செய்கிறது. 


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


 


தமிழக அரசு விவசாயிகளையும், விவசாயத்தையும் கண்இமைகளை பாதுகாப்பது போன்று பாதுகாப்போம் என்று கூறியுள்ளது. எந்தவித ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். எண்ணெய் கிணறுகளை அனுமதிக்காத நிலையில் எண்ணெய் எரிவாயு எடுத்து செல்லும் குழாய்களை அமைக்க அனுமதித்தால் ஆபத்து காத்துள்ளது. புதிய எண்ணெய் கிணறுகள் மட்டுமின்றி பழைய எண்ணெய் எரிவாயு திட்டங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு குழாய் பதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.


 


மயிலாடுதுறை: சாராய வியாபாரியை கொல்ல முயற்சி- ரவுடியை கட்டி வைத்து குமுறிய பொதுமக்கள்..!