தமிழகத்தின் முதலமைச்சராக மு‌.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் அவருக்கு பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து, கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதுதான். இந்த சூழலில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் 11 மாவட்டங்களில் மயிலாடுதுறையும் அடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் முக்கிய திட்டங்கள் உருவாக்கம் இன்றி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளிலேயே அரசின் அதிக கவனத்தைக் காணமுடிகிறது. மேலும் சென்ற முறை மயிலாடுதுறை மாவட்டத்தின் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை திமுக கூட்டணியில் கைப்பற்றியுள்ளது. பூம்புகார் மற்றும் சீர்காழியை திமுகவும், மயிலாடுதுறையை திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளதால் ஆளும் கட்சி ஆளுமை நிறைந்த மாவட்டமாக மயிலாடுதுறை உள்ளது.




அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 6 டன் கொள்ளவு கொண்ட நிரந்தர ஆக்சிஜன் கொள்கலன் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கொள்கலன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெறபட்டு வருகிறது. முக்கிய முயற்சியாக மத்திய அரசிடமிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி பெறுவதற்கான நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 




குறிப்பாக வருகின்ற ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை காவிரி நீர் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படும் உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் என்பதால் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் 23 இடங்களில் 5.45 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் ஐஏஎஸ் அதிகாரி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.




மாற்றங்கள் என்று பார்த்தால், புதியதாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளரும், புதிய மாவட்டம் உருவான சில மாதங்களில் சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 12 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளை கும்பலை நான்கு மணிநேரத்தில் பிடித்து அந்த கும்பலின் தலைவனை என்கவுண்டர் செய்த ஸ்ரீநாதாவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம்செய்து. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுகுணா சிங்கை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்