மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மயிலாடுதுறை நகரத்தின் முக்கிய அடையாள சின்னமாக மணி குண்டு விளங்குகின்றது. 1943 ஆம் ஆண்டு போரில் தொடர் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெர்மனியை வென்றதன் நினைவு சின்னமாக மயிலாடுதுறையில் கட்டப்பட்ட மணிகுண்டு வரலாற்றுச் சின்னமாக விளங்கி வருகிறது. 




இந்நிலையில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக தனியார் பேக்கரி சார்பில் மணிக்கூண்டு கேக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தடி உயரமும் ஒன்பதடி சுற்றளவும் கொண்ட இந்த பிரம்மாண்ட கேக் 250 கிலோ எடையில் பத்து ஊழியர்களின் உழைப்பில் ஒரு வார காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மணி கூண்டில் இருப்பது போல் நான்கு புறமும் உண்மையான கடிகாரங்கள் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேக் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. 




இதனை பல்வேறு தரப்பினரும் பார்த்து கேக் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கேக் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை சால்வை அணிவித்து பரிசு பொருட்கள் கொடுத்து பாராட்டினர். இந்த பிரமாண்ட கேக் தற்போது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.




தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் செம்பனார் கோயிலில் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் கீழ முக்கூட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 




திமுகவினர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தை கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்.




மயிலாடுதுறை அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகள் செய்து பயனடைந்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அரங்கக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவங்கி வைத்தார்.




முகாமில் ரத்தப் பரிசோதனை ஸ்கேன் பொது மருத்துவம் இசிஜி சித்த மருத்துவம் பல் மருத்துவம் காச நோய் தோல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் இயற்கை உணவுகள் குறித்த பாரம்பரிய உணவு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.