நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் தொற்று பரவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து விடுகிறது. குரோனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல வழிகளில் முயன்று வரும் சூழலில், தற்போது அதன் மூன்றாம் அலை தாக்கம் பெருமளவில் பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு ஏராளமான நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியது மட்டும் இன்றி, அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தது. அதனையடுத்து கொரோனா இரண்டாம் அலை ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்  ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.


மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா - அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிய திமுகவினர்




இந்நிலையில்  தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை, ஓமிக்ரான் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் டெல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், ஹோப் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கருவியுடன் ஆக்சிஜன் பிளான்ட்டை அமைத்துத் தந்துள்ளது. இந்த ஆக்சிஜன் பிளான்ட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் முன்னிலையில், டெல் டெக்னாலஜிஸ்ட் நிறுவன கல்வி மற்றும் சுகாதார மண்டல தலைவர் சத்யா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர்  அரசு பெரியார் மருத்துவமனை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.


ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு - அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்




மேலும் கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த புதிய ஆக்சிஜன் பிளான்ட் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 24,257  பேர் கோரனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 23,334 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 321 மாவட்டம் முழுவதும் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது கொரோனோ வைரஸ் தொற்றால் 602 பேர் மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் மாவட்டத்தில் ஒருவர் மட்டும் ஓமிக்ரான் வைரஸ் தொட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.