சென்னை தலைமை அலுவலகத்தில் 8-ம் தேதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்த போவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு 200 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்சு திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் அமைந்து உள்ளன.


108  ஆம்புலன்ஸ் சங்கம்:


மீதம் உள்ளவற்றில் 65 ஆம்புலன்சுகள் குழந்தைகளுக்கானவையாக செயல்படுகிறது. இந்த சேவையை பயன்படுத்த அவசர தொலைபேசி எண் 108-க்கு தினமும் 12 ஆயிரத்து 500 அழைப்புகள் வருகின்றன. இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008 -ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 266 பேர் பயன் அடைந்துள்ளனர்.




வேலை நிறுத்தப்போராட்டம்:


கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி மாதம் 8-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் அதற்கான ஆயத்த கூட்டத்தை நடத்தினர்.


மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநில செயலாளர்கள், காளிதாஸ், பாஸ்கரன் மாநில பொருளாளர் சாமிவேல், மாநில தலைவர் வரதராஜ், மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன் ஆகியோர் ஜனவரி 8 -ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து விளக்கி பேசினர்.


Sukran Peyarchi 2023: டிசம்பர் மாதத்தில் கோடிகளில் செழிக்கப்போவது யார்? - 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் இதோ..!




இதில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத 12 மணிநேர வேலை என்பதை கைவிட்டு சட்டப்படியான 8 மணிநேர வேலை வழங்க வேண்டும், வார விடுமுறை நாட்களில் ஆள்பற்றாக்குறையை  காரணம் காட்டி நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவையை தங்குதடையின்றி இயக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் பழுது அடைந்துள்ளதை சீரமைத்து கொடுக்க வேண்டும்.


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை வதசிகள் செய்துகொடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களிடம் மரியாதை குறைவாகவும், முறையான வாகன பராமரிப்பினை குறித்த நேரத்தில் செய்துகொடுக்காமல் பொதுமக்கள் உயிரோடு விளையாடுவதை கண்டித்தும், வரும் 8 -ம் தேதி சென்னை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றுவம், கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றார். ஜனவரி 8ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


Migjam Cyclone: புயலில் இருந்து தப்புகிறது தமிழகம்! ஆனால் மழை சரவெடிதான்! - எங்கெல்லாம்?




குறைபாட்டை சரி செய்க:


இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில் 2008 -ஆம் ஆண்டு முதல் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1353 ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதாக கணக்கில் உள்ளது. அத்தனை ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக 12 மணிநேரம் வேலை கடைபிடிக்கப்படுவதால் குறைவான ஆம்புலன்ஸ்களை வைத்து நிறைய சேவைகளை தொழிலாளர்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஏற்படும் விபத்தில் தொழிலாளர்களும் பொதுமக்களும் உயிரிழக்க வேண்டியுள்ளது.


சேவை திட்டத்தை நிர்வாகம் செய்யும் தனியார் நிறுவனம் கூடுதலாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை குறைபாட்டினை சரிசெய்ய வலியுறுத்தி போராட்டத்தை வருகின்ற 8ம்’தேதி முதல் முன்னெடுத்துள்ளோம் என்றார்.