தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களை போக்கி புண்ணியம் தருவதாகும். இங்கு மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமாகி நீராட வருவதாலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் இங்கு புனித நீராடவருவதாக ஐதீகம் என்பதால் இந்த மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது.
இந்த குளத்தில் 20 தீர்த்தத் கிணறும், குளத்துடன் சோ்த்து 21 தீர்த்த கிணறுகளாகும், கரைகளில் சுற்றுலும் 16 சோடச லிங்கங்களும் உள்ளன. இங்குள்ள சிவனுக்கு ஒன்று ஒன்றுக்கு ஒவ்வொரு பெயா் உண்டு. புனித குளமான மகாமக குளம் சுமார் 6 அரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. சதுரமாகவும் இல்லாமல், செவ்வகமாக இல்லாமல் அருஉருவமாக காணப்படும்.இந்த குளத்திற்கு அரசலாற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கும், குளத்தின் தென் கிழக்கு மூலையில் வடிகாலும் உள்ளது. அதனால் அங்குள்ள தெருவிற்கு வடிவாய்க்கால் தெரு என்ற பெயரும் உண்டு. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழாவின் போது, குளத்தில் உள்ள 20 தீர்த்த கிணறுகளிலும் அந்த தெய்வங்கள் வந்து புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.
இதனால் விஷேச நாட்கள் மட்டுமில்லாமல் தினந்தோறும் வெளி மாநில,மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள்.கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மகாமக குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. கும்பகோணம் பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. நகர் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான குளங்களிலும் மழை நீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மகாமக குளம் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மகாமக குளம், பல ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவையும் எட்டி, சில படிக்கட்டுகளை தவிர, அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் குளத்தின் நடுவே அமைந்துள்ள மைய பீடத்தின் மேல்பகுதி சிறிதளவு மட்டுமே வெளியே காட்சியளிக்கிறது. மகாமககுளத்தில் மழை நீரானது சுமார் 20 அடிக்கும் மேல் நிரம்பி இருப்பதால் பக்தர்கள் பொதுமக்கள் யாரும் குளத்தினுள் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.