யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெற்றவர் கம்பர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர். 




இந்நிலையில் இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் 93 -ஆம் ஆண்டு கம்பர் விழா நடைபெற்றது. தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது. 




தொடர்ந்து, கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர். அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழறிஞர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர். இதில் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.


மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரம் கிராமத்தில் பொங்கல் கரும்புகளை அரசு கொள்முதல் செய்யவில்லை என குற்றம் சாட்டி மல்லியம் மெயின் ரோட்டில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பபை சேர்த்து வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக இந்த ஆண்டு பொங்கலுக்கு செங்கரும்பையும் சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 111 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குத்தாலத்தை அடுத்த வானாதிராஜபுரம் கிராமத்தில் 50 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்று லட்சத்துக்கு மேல் கரும்பு பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்துள்ள நிலையில் ஒரு சில விவசாயிகளிடம் மட்டும் தலா 500 கரும்பு கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்து விவசாயிகளிடமும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க தங்கள் பகுதி கரும்பினை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி பொங்கல் கரும்புகளுடன் மல்லியம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் . இந்த மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற