தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் நேற்று காலை ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் தொடக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய தமிழ் விளையாட்டாகும். இதற்கு ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு பயன்படுத்துவர். இந்த காளையை ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும். யார் அதை அடக்குகிறார்களோ அவர் வீரன் என கொண்டாடப்படுவர். 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணைக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் இது புகழ்பெற்றது. அதிலும் குறிப்பாக மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றவை. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இத்தகைய புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று தடை கோரி வழக்குகள் போடப்பட்டன. கடந்த 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர்.
தஞ்சை அருகே திருமலைசமுத்திரத்தில் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய இளம் காளையர்கள்
என்.நாகராஜன் | 26 Feb 2023 05:39 PM (IST)
களத்தில் மாடுகளை பிடித்த வீரர்களுக்கு அண்டா, குடம், கட்டில், சேர் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டி
Published at: 26 Feb 2023 05:39 PM (IST)