இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும், பலகாரங்களும் தான். அதிலும் குறிப்பாக குடும்பத்தினரோடும், உறவுகளோடும் வாழ்த்தை பரிமாறக் கொள்ள உதவியாய் இருப்பது இனிப்பு, முறுக்கு, அதிரசம், பயறு உருண்டை, ரவா உருண்டை போன்ற பாரம்பரிய உணவு வகைகள் தான்!இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களும் வேலைக்குச் செல்வதால் குடும்பச் சுமையில் பாதியை தானும் சுமக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் தங்களுடைய சிறு வயதில் அவர்களுடைய  தாயாரால் செய்து தரப்பட்ட இந்த பாரம்பரிய பலகாரங்களை தங்கள் குழந்தைகளுக்கு செய்து தரும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விட்டது.




இந்த பலகாரங்களுக்கான மாவு வகைகளை தயாரிப்பதற்கு முறையான கால அவகாசம் இல்லாததனாலும், போதிய அனுபவம் இல்லாமை என தங்கள் குழந்தைகளுக்கு இனிப்பகங்களில் இருந்து கிலோ கணக்கில் வழக்கமான இனிப்பு வகைகளை வாங்கி தீபாவளியை ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தக் மனக்குறையைக் போக்கவே சந்தையில் தீபாவளி பண்டிக்கைக்கான ஸ்பெஷல் ரெசிப்பிகளாக  இனிப்பகங்களில் பல்வேறு திண்பண்டங்கள் கண்ணை கவரும் வகையில் கலர் கலராக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமன்றி, இளம் குடும்பப் பெண்களும் கூட இது போன்ற பலகாரங்களை இரண்டே மணி நேரத்தில் தன் கைப்படச் செய்து பழைய பாரம்பரிய சுவை சற்றும் மாறாமல் தங்கள் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் தீபாவளியில் பரிமாறக்கூடிய அளவில் இந்த பொருட்கள் அனைத்தும் காம்போ பேக் ஆகவும், தீபாவளி கிஃப்ட் பாக்ஸ் போன்ற வடிவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தீபாவளி ஆஃபர்: திருச்சியில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அதிகாரிகள் தகவல்




அந்த வகையில் மயிலாடுதுறையில் பிரபல தனியார் இனிப்பகம் ஒன்று குழந்தைகளை கவரும் வகையில் புது முயற்சியாக சங்குசக்கரம், 15 கிலோவில் பாலினால் தயாரிக்கப்பட்ட அனுகுண்டு சுவீட், 30 கிலோ எடையில் பூந்தியால் செய்யப்பட்ட புஷ்வானம், ராக்கேட் போன்ற இனிப்புகளை தயார் செய்து வைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஓமம் கலந்த குச்சி பிஸ்கட், பட்டர் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், மற்றும் எள்ளுமிட்டாய் உள்ளிட்ட கடலையால் தயாரிக்கப்பட்ட மிட்டாய் வகைள் என நூற்றுக்கணக்கான இனிப்புகள் மிட்டாய் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. வீட்டுமுறை பலகாரங்களான தினை, சாமை, வரகில் தயாரிக்கப்பட்ட அதிரசம், கருப்புஉளுந்து உருண்டை, கெட்டிஉருண்டை, ரவா உருண்டை, கோதுமைமாவு உருண்டை என் பல்வேறு பாரம்பரிய இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


Latest Gold Silver: வாரத்தின் முதல் நாளே ஹாப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா?




இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு, வீட்டிற்கு தேவையான அளவு இனிப்பு மற்றும் பலகார வகைகள் தங்களுக்கு கிடைப்பதாலும், நேரம் மிச்சமாவதாலும் தங்களுக்கு இது போன்ற ரெடிமேட் இனிப்பு பலகார வகைகள் மிகவும் உதவியாக இருப்பதாக கூறும் இல்லத்தரசிகள்  இதனை அதிக அளவில் வாங்கிச் சென்று தீபாவளியை கொண்டாடி மகிழ தயாராகி வருகின்றனர். பாதுகாப்பாக பாரம்பரிய இலக்கோடு செய்யப்படும் இந்த இனிப்பு வகைகள் பல்வேறு தரப்பிலும் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது.