வருது..வருது..! கும்பகோணத்தை குறிவைத்துள்ள பிரம்மாண்ட வர்த்தக நிறுவனம்

சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பேசிய முதல் கன்னிப் பேச்சே கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்.

Continues below advertisement

தஞ்சாவூர்: கும்பகோணத்தை குறிவைத்துள்ள தனது கிளையை வலுவாக பதிக்க திட்டமிட்டுள்ளது மிகப்பெரிய ஷாப்பிங் நிறுவனம் ஒன்று. அதெல்லாம் சரி. கும்பகோணத்தை டார்க்கெட் செய்ய என்ன காரணம். தஞ்சை மாவட்டத்தில் பெரிய மாநகராட்சி பகுதி என்றால் அது கும்பகோணம்தான். 

Continues below advertisement

டி மார்ட்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பேசிய முதல் கன்னிப் பேச்சே கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். கட்டமைப்பு வசதி உட்பட பல்வேறு வசதிகள் அடங்கிய கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இன்றளவும் கோரிக்கைகள் வந்தபடியேதான் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவித்துவிடுவார்கள் என்ற செய்தி இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

தஞ்சாவூரை விட கும்பகோணம் பெரிய வர்த்தக நகரமாக உள்ளதால் மாவட்டம் ஆனால் பெரிய நிறுவனங்கள் தங்களின் கிளைகளை கும்பகோணத்தில் அமைத்து விடும் என்பதில் ஐயமில்லை. இதற்கிடையில் நான் உங்களுக்கு முன்னாடி வந்து நிற்கிறேன் என்பது போல் வர்த்தக ரேஸில் வலுவாக கால் ஊன்றி பல மாவட்டங்களில் தனது கிளையை திறந்து வெற்றி கொடி நாட்டியுள்ள டி மார்ட் கும்பகோணம் பக்கம் தன் பார்வையை திருப்பி உள்ளது. 

மக்கள் ஆதரவு

டி மார்ட் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் அடி எடுத்து வைத்து வருகிறது. இதற்கு மக்களின் அமோக ஆதரவும் உள்ளது என்றால் மிகையில்லை. காரணம் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். இங்கு உள்ளே "சும்மா" சென்று சுற்றி பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் கூட வெளியில் வரும்போது ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பர்சேஸ் செய்து வருவார்கள். இதுதான் டிமார்டின் வர்த்தக வெற்றியாக உள்ளது.

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பல்வேறு இடங்களில் டி மார்ட் நிறுவனம் தங்களது கிளைகளை திறந்துள்ளது. சமீபத்தில்தான் நெல்லை மாவட்டத்தில் டிமார்ட் கிளையானது திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து தங்களது கிளைகளை தொடங்கி வருகின்றன.

இடம் தேர்வு

கோவை மாவட்டத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட டி மார்ட் நிறுவனத்தின் கிளைகள் திறக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டி மார்ட் நிறுவனத்தில் பொருட்களின் விலை அனைத்தும் மிகவும் குறைவு என்பதால் மக்கள் கூட்டம் தொடர்ந்து படை எடுத்த வண்ணம் இருக்கும். குறிப்பாக வார கடைசி நாட்களில் டி மார்ட் திருவிழா கோலம் பூண்டுவிடும். அந்தளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் டி மார்ட்டில் குவிந்து இருப்பார்கள். 

கும்பகோணம் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் வெற்றிக் கொடி நாட்டி வரும் நிலையில் தற்போது இந்த பகுதியை குறி வைத்துள்ள டிமார்ட் நிறுவனம். இதற்காக டி மார்ட் நிறுவன அதிகாரிகள் கும்பகோணம் பகுதிக்கு விசிட் அடித்து தங்கள் நிறுவனம் அமைக்க இடத்தையும் தேர்வு செய்துள்ளனராம். மிக பிரமாண்டமாக அமைக்க வேண்டும் என்பதால் கும்பகோணம் பைபாஸ் பகுதியில் இடம் தேர்வு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அவ்வாறு அந்த நிலம் உறுதி செய்யப்பட்டால் இந்த டிமார்ட் கிளையானது சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கும்பகோணத்தில் மிகப்பிரமாண்டமாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 60 ஆயிரம் சதுர அடியை தாண்டி இன்னும் பிரமாண்டமாகத்தான் டிமார்ட் அமைய உள்ளது என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். கும்பகோணம் பைபாஸ் பகுதியாக இருந்தாலும் மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் வாகனங்கள் நிறுத்துவது உட்பட பல்வேறு வசதிகளும் அடங்கிய வகையில் இந்த கிளையை அமைக்க வேண்டும் என்று டி மார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதற்கு கும்பகோணம் பைபாஸ் பகுதியில் இடத்தை வளைத்து போட இப்போதே பேச்சுவார்த்தைகளும் ஆரம்பம் ஆகி உள்ளது. இந்த பகுதியில் இடம் வைத்துள்ளவர்களுக்கு அடிச்சுச்சு லக்கி ப்ரைஸ் என்கின்றனர் மக்கள். இந்த தகவல் கும்பகோணம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement