நாடுமுழுவதும் இன்று இந்திய திருநாட்டின் நாட்டின் 77 வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது வருகின்றது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் காவல்துறை, வருவாய் துறை, சுகாதார துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 412 அரசு அலுவலர்களுக்கு விருதுகள் மற்றும் 912 மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி 502 பயனாளிகளுக்கு 14.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று இந்திய நாட்டின் 77 வது சுகந்திர தின விழா மாவட்ட முழுவதும் பல்வேறு அரசு மற்றும் பள்ளி கல்லூரிகள் என பல இடங்களில் நடைபெற்றது. அதில் அதிகாரிகள் கொடியேற்றி வைத்து கொண்டாடினர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் யுரேகா தேசிய கொடியை ஏற்றினார். வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை சேர் பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் சண்முகம் தேசிய கொடியை ஏற்றினார். உதவி செயற்பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி தேசிய கொடியை ஏற்றினார். இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.