மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அடுத்த பெரிய நிம்மேலி கிராமத்தில் ஓர் ஆசிரியர் பள்ளிகளின் சார்பில் கழிவறைகளுடன் கூடிய குளியல் அறைகள் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 1800 ஒராசிரியர் பள்ளிகளை  நடத்தி வருகிறது. இதன் மூலம் 51 ஆயிரம் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி, சுகாதாரம், நற்பண்புகள் ஆகியவற்றை 1700 கிராமங்களில் செய்து வருகிறது.




தற்போது ஓர் ஆசிரியர்கள் பள்ளிகள் சார்பில் 7 மாவட்டங்களில் பின் தங்கிய கிராமத்தில் குளிக்க, இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு கழிவறைகளுடன் கூடிய குளியல்அறைகள் கட்டப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் 60 கழிவறைகளுடன் கூடிய குளியல் அறைகள்  30 லட்சம் ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டு, சீர்காழி அருகே பெரியநிம்மேலி கிராமத்தில் முதற்கட்டமாக 15 கழிவறைகளுடன் கூடிய குளியல் அறைகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.  இதில் மா இலை தோரணம், குத்துவிளக்கு ஏற்றி புதுமனை புகுவிழா போல மகிழ்ச்சியோடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் புதிதாக கட்டப்பட்ட பாத்ரூம்களுக்கு செய்து மகிழ்ந்தனர். 




இதனை ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார், ஒராசிரியர் பள்ளிகள் மூலமாக இதுவரை 105 கோயில் குளங்கள் தூர்வாரப்பட்டு,1900 கழிவறைகளுடன் கூடிய குளியலறைகள் கட்டி பாரத பிரதமரின் நற்சான்றிதழை மூன்று முறை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.




மயிலாடுதுறை அருகே நல்லாசிரியர் விருது பெற்ற மாப்படுகை அரசு உயர்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளியான தலைமையாசிரியருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.


மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வருபவர்  தாமரைச்செல்வி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக சேவையாற்றி வருகிறார். இவர் கடந்த 21 - ஆண்டுகளாக மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி அதனை தொடர்ந்து தாழஞ்சேரி மற்றும் கொற்கை பள்ளிகளிலும் பணியாற்றி இப்போது மாப்படுகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 




மாற்றுத்திறனாளியான இவர் மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்திற்கும், தேர்ச்சி விகிதத்திற்கும் தம் வேலை செய்த அனைத்து பள்ளிகளிலும் அரும்பாடுபட்டவர் ஆவார். அவருக்கு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசினை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும்  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நல்லாசிரியை தாமரைச்செல்விக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 




அதனைத் தொடர்ந்து நல்லாசிரியை மாற்றுத்திறனாளியான தலைமையாசிரியர் தாமரைச்செல்விக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில் கிராம மக்கள் ஏராளமான பங்கேற்று ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.