தஞ்சாவூர்: டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினேன். இப்போதுள்ள அரசு மும்முனை மின்சாரத்தில் நேரக் கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. ஆனால், மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகின்றனர். மின் தட்டுப்பாடு இல்லை என்றால், எதற்கு நேரக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்? என்று முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தஞ்சாவூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ., இளைய மகன் கே. இன்பன் - ரத்னா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அவர் மேலும் பேசியதாவது: ஜெயலலிதா காலத்தில் காவிரி பிரச்னையில் நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் பங்கீடு முழுமையாகக் கிடைக்க சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்பிரச்னையில் ஜெயலலிதா முழுமையாக அக்கறை கொண்டு, ஈடுபட்டு 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டார். டெல்டா பாசன விவசாயிகள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த டெல்டா பாசன விவசாயிகளுக்கு இதுதான் உயிர் மூச்சு; இதை வைத்துதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. எனவே, டெல்டா பாசன விவசாயிகளை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என பல முறை என்னை சந்தித்து காமராஜ் ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தார்.
மின்தட்டுப்பாடு இல்லையாம்... அப்போ நேரக்கட்டுப்பாடு எதற்கு? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
என்.நாகராஜன் | 27 Mar 2023 12:57 PM (IST)
திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது மின்வெட்டும் வந்துவிடும். இப்போது மின் வெட்டு வந்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி
Published at: 27 Mar 2023 12:57 PM (IST)