நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக கல் பரிசோதனை செய்ய மருத்துவர் இல்லாததால் ஸ்கேன் செய்வதற்கு தனியாரிடம் செல்ல வற்புறுத்தும் மருத்துவமனை ஊழியர்கள் வசதி இல்லாத நோயாளிகள் அவதி.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு,ஸ்கேன் பிரிவு, தனியாரிடம் ஸ்கேன் செய்ய அறிவுறுத்தும் ஊழியர், பூட்டி இருக்கும் ஸ்கேன் சென்டர்.
நாகை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக கடந்த 12.01.22 அன்று பாரதப் பிரதமர் மோடி அவர்களால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரத்தூர் இல் தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரி யில் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மருத்துவ சிகிச்சை என்பது நாகையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்ய அனைத்து விதமான வசதிகளுடன் நவீன கருவிகளும் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் தனியார்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை ஸ்கேன் உட்பட எவ்வித பரிசோதனையும் செய்ய கருவிகள் இல்லை ஊழியர்கள் இல்லை எனவும் கூறி தனியாரிடம் சென்று எடுக்க வேண்டுமென வலுக்கட்டாயமாக வெளியிட்டிருக்கின்றனர் இதனால் பல்வேறு உபாதைகள் உடன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் பெரும் மன உளைச்சலுக்கும் உடல் ரீதியாகவும் பாதிப்படைந்து அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதனிடம் கேட்டபோது கருவிகள் இருந்தும் மருத்துவர் இல்லாத காரணத்தால்இங்கு ஸ்கேன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.